சொற்கள் | பொருள் |
---|---|
கொங்கு | தேன் |
அலர் | மலர் |
தார் | மாலை |
கொங்கலர்தார் | தேன் மணம் வீசுகின்ற மலர் மாலை |
சென்னி | சோழ மன்னன் |
அம் | அழகு |
Wednesday, December 10, 2008
அருஞ்சொற்கள்
Tuesday, December 9, 2008
சிலப்பதிகாரம்
மங்கல வாழ்த்துப் பாடல்
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகளித்த லான்
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று
இவ் அம் கண் உலகு அளித்தலான்
சொற்கள் | பொருள் |
---|---|
கொங்கு | தேன் |
அலர் | மலர் |
தார் | மாலை |
கொங்கலர்தார் | தேன் மணம் வீசுகின்ற மலர் மாலை |
சென்னி | சோழ மன்னன் |
அம் | அழகு |
தேன் மணம் வீசுகின்ற மலர் மாலையையுடைய சோழனது குளிர் வெண் குடையைப் போல
இந்த அழகிய உலகிற்கு குளிர்ச்சியை அளிப்பதால்
திங்களைப் போற்றுவோம்!திங்களைப் போற்றுவோம்!
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி யுலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்
Subscribe to:
Posts (Atom)