Tuesday, December 9, 2008

சிலப்பதிகாரம்

மங்கல வாழ்த்துப் பாடல்


திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் 
வங்கண் உலகளித்த லான்

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று 
இவ் அம் கண் உலகு அளித்தலான்









சொற்கள் பொருள்
கொங்கு தேன்
அலர் மலர்
தார் மாலை
கொங்கலர்தார் தேன் மணம் வீசுகின்ற மலர் மாலை
சென்னி சோழ மன்னன்
அம் அழகு

தேன் மணம் வீசுகின்ற மலர் மாலையையுடைய சோழனது குளிர் வெண் குடையைப் போல 
இந்த அழகிய உலகிற்கு குளிர்ச்சியை அளிப்பதால்
திங்களைப் போற்றுவோம்!திங்களைப் போற்றுவோம்!


ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் 
காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு 
மேரு வலந்திரித லான்

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் 
நாமநீர் வேலி யுலகிற்கு அவன்அளிபோல் 
மேல்நின்று தான்சுரத்த லான்

No comments: